ஏற்காடு கோடை விழாவில் காட்சிபடுத்தப்பட்ட செல்லப்பிராணிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

By Velmurugan s  |  First Published May 29, 2023, 10:59 AM IST

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற கோடை விழாவில் நடத்தப்பட்ட செல்லப்பிராணிகள் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


ஏற்காடு கோடை விழா கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கோடை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Latest Videos

இந்த கோடை விழாவினை தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். கோடை விழாவில் ஏழாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இளைஞர்களுக்கான சைக்கிள் ஓட்டும் போட்டி, கிரிக்கெட் போட்டி, கைப்பந்து மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ரகசியத்தை உங்களுக்கு சொல்வேன் - சரத்குமார் பேச்சு

இதனைதொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் மற்றும் வீட்டு விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற நாயகள் கட்சியில் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்ல நாய்களை காட்சிப்படுத்தினர். இதில் அல்ஜிசன், பொமேரியனின், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், லேபர் டாக், பாக்சர் காக்கர், ஸ்பேனில் டேஷண்ட் போன்ற வெளிநாட்டின நாய் வகைகள் இடம் பெற்றன. இது தவிர ராஜபாளையம் கோம்பை சிப்பிப்பாறை போன்ற நாட்டின நாய் வகைகளும் பங்கேற்றன.

இந்த நாய்கள் தனது எஜமானனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கீழ்ப்பணிந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக காவல்துறையைச் சேர்ந்த நாய்களுக்கான கீழ்ப்படிதல் சாகச காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தவிர வெளிநாட்டு இன பூனைகள், கிளிகள் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம்பெற்றன. மேலும் நாட்டின பசுக்கள், ஆடுகள், கால்நடைகள் ஏராளமானவை கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டன.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - முழு விவரம் உள்ளே

இந்த கண்காட்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தினர். ஏற்காடு கோடை விழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த செல்லப் பிராணிகள் கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் சிறந்த செல்லப்பிராணிகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பரிசுகள் வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோடை விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

click me!