உதகை அருகே ஆசை ஆசையாக வாங்கிச் செல்லப்பட்ட பிரியாணியில் பூரான் கிடந்ததைதக் கண்டு அதிர்ச்சியடைந்த தோட்டத் தொழிலாளர்கள் உணவகம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரிப்பதற்கு ஏற்றவாறு உணவகங்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் பெருகி வருகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் திடீர் திடீரென முளைக்கும் உணவகங்களில் முறையாக உணவு சமைக்கப்படுகிறதா? முறையாக உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படுகின்றனவா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனெனில் அவ்வபோது உணவில் கரப்பான் பூச்சி, பல்லி, இரும்பு துகள் போன்ற பொருட்கள் உணவு பிரியர்களால் கண்டெடுக்கப்படுவதே இது பேன்ற கேள்விகளுக்கு வித்திடுகிறது.
இந்நிலையில், உதகை அருகே M. பாலடா பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர். அப்போது பணிக்குச் சென்ற இடத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிட தயாராகும் பொழுது கடையிலிருந்து வாங்கி வரப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த பொழுது பிரியாணிக்குள் விஷ தன்மையுடன் கூடிய பூரான் பூச்சி இறந்து கிடந்ததை கண்டு தோட்டத் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐடி ரெய்டு கேள்விகளை தவிர்க்க பத்திரிகையாளர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்த அமைச்சர், கனிமொழி
பின்னர் பார்சலை கொண்டு சென்று கடைக்காரரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது கடைக்காரர் செல்போனில் யாரிடமோ கூலாக பேசிக் கொண்டு கத்தாதீங்க என்று கூறி அசால்டாக பதில் கூறினார். மக்கள் பணம் கொடுத்து உணவுகளை வாங்கிசெல்லும் நிலையில் உணவில் பூரான் உள்ளிட்ட விஷத்தன்மை கொண்ட பூச்சி தென்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இது போன்ற பகுதிகளில் உணவுகள் தரமானதாக தரப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் உயிரிழப்பு… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!