உங்களுக்கு முடி வெட்ட கூடாதுனு ஊர்ல சொல்லிட்டாங்க; சலூன் கடையில் நடந்த தீண்டாமை கொடுமை

By Velmurugan sFirst Published Mar 20, 2024, 6:30 PM IST
Highlights

நாமக்கல் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்ட கிராம மக்கள் சார்பில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய தீண்டாமை வன்கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த திருமலைபட்டி, காமராஜர் காலனியை சேர்ந்தவர் அருண்பாண்டியன். கடந்த 17ம் தேதி மாலை திருமலைபட்டியில் உள்ள சீட்டு என்ற சலூன் கடைக்கு தனது இருமகன்களை முடி திருத்தம் செய்ய அழைத்து சென்று உள்ளார். ஆனால் சலூன் கடையின் உரிமையாளர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உங்களுக்கு இங்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருப்பதாகவும், தான் முடி திருத்தம் செய்தால் இங்கு கடையை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஏற்காடு மலைப்பாதையில் கிடந்த சூட்கேஸ்; திறந்து பார்த்த போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன் முடித்திருத்தம் செய்யச்சொல்லி சலூன் கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியும் அவர் இறுதி வரை அருண்பாண்டியனின் குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்யவில்லை. இந்த நிலையில் அருண்பாண்டியன் தனது மகனுடன் சலூன் கடைக்காரிடம் முடித்திருத்தம் செய்யச்சொல்லி வலியுறுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நாடாளுமன்ற தேர்தலுக்கு ரீ ரிலீஸ் செய்த திமுக; வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி

இதுகுறித்து அருண்பாண்டியன் கூறுகையில் கடந்த 17ம் தேதி திருமலைபட்டியில் உள்ள சீட்டு என்கின்ற சலூன் கடைக்கு சென்று மகன்களுக்கு முடிதிருத்தம் செய்யச்சொல்லி கேட்டபோது, கடைக்காரர் முடிதிருத்தம் செய்ய முடியாது, ஊர் கட்டுப்பாடு இருப்பதாக கூறினார். அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற நிகழ்வுகள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன. இந்த தீண்டாமை சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பதாக அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

click me!