திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தியை வேட்பாளராகக் களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தியை வேட்பாளராகக் களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்குத்தான் நாமக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. வழங்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வென்றி பெற்று தற்போதைய எம்.பி.யாக இருக்கும் சின்ராசுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த முறை வெற்றி பெற்றதைக் கருத்தில் கொண்டு 2024 மக்களவைத் தேர்தலிலும் கொமதேக இந்தத் தொகுதியைப் பெற்றிருக்கினது. இதற்கான ஒப்பந்தம் பிப்ரவரி 24ஆம் தேதி கையெழுத்தானது. இந்நிலையில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சூர்யமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை அடுத்து கொமதேக திமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது குறித்த திட்டமிடல்களில் ஈடுபட்டுள்ளது. கட்சியின் முன்னணித் தலைவர்கள் இது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
திமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தங்கள் நிறைவு பெற்றுள்ளன. காங்கிரஸ், திமுக, விசிக தவிர பிற கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இன்னும் ஓரிரு தினங்ககளில் திமுகவின் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.