நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
நாமக்கல் மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதி போட்டியிடுகிறது. இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி என்பவரை வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்தார்.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்; கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்; தப்புமா அதிமுக?
இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி சூரியமூர்த்திக்கு பதிலாக நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிரீன் சிக்னல் கொடுத்த ஆளுநர்! அதிமுக முன்னாள் அமைச்சர்களை ரவுண்ட் கட்டப்போகும் சிபிஐ!
இவர் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக எஸ்.சூரியமூர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம் என்பது போல பேசிய வீடியோ வைரலாகி வருவதை அடுத்து வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.