கோழிக்கறியால் கொரோனாவா..? நிருபித்தால் ரூ.1,00,00,000 பரிசு..!

By Manikandan S R SFirst Published Mar 18, 2020, 4:52 PM IST
Highlights

கோழிக்கறி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது நிருபித்தால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது வரை 3,237 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான்,தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் கோழிகள் மற்றும் சிக்கன் முலமாக அதிகமாக பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவ தொடங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிக்கன் மட்டுமில்லாது முட்டை போன்ற அசைவ உணவு வகைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழிக்கறி, முட்டை விற்பனை மந்தமடைந்துள்ளது. இந்த நிலையில்  நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், 450 காசுக்கு விற்பனை செய்து வந்த முட்டை தற்போது 125 காசுகள் கீழ் விற்கக்பட்டு வருகிறது. அதே போல ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி ரூ.10-க்கு விற்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதாக தெரிவித்தார்.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

இதற்கு சமூக வலைதளைங்களில் பரப்பப்பட்ட வதந்தியே காரணம் என்றும் அவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.  மேலும் கோழிக்கறி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது நிருபித்தால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றும் சுப்ரமணியம் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

அடக்கமுடியாத கோபமும் ஆத்திரமும் வருது..! மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!

click me!