நள்ளிரவில் திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவேப்பநத்தம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று அதே சாலையில் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல நொறுங்கவே காரில் பயணம் செய்த கட்டடத் தொழிலாளர்கள் 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பா நகரில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், தர்மன், பப்லு, ரோஷன் குமார், சசிகுமார், ரஜேந்திரன் ஆகிய 6 கட்டட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று இவர்கள் 6 பேரும் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு டைல்ஸ் ஒட்டும் பணிக்குச் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக ஒரு சுமோ காரில் அனைவரும் அக்கோவிலுக்கு சென்றுள்ளனர்.
undefined
அங்கு டைல்ஸ் ஓட்டும் பணியை முடித்து விட்டு மீண்டும் செல்லப்பா நகருக்கு அதே காரில் திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவில் திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவேப்பநத்தம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று அதே சாலையில் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல நொறுங்கவே காரில் பயணம் செய்த கட்டடத் தொழிலாளர்கள் 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பலியானவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். விபத்து ஏற்பட்டதும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.