2ம் வகுப்பு மாணவனை மலக்கழிவு அல்ல வைத்த கொடுமை... ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை...!

By Thiraviaraj RM  |  First Published Jan 10, 2020, 1:40 PM IST

ஆசிரியைக்கு 5 அண்டு சிற  2ம் வகுப்பு மாணவரை மனித கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆஅண்டு சிறை தணடனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 


ஆசிரியைக்கு 5 அண்டு சிற  2ம் வகுப்பு மாணவரை மனித கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆஅண்டு சிறை தணடனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பள்ளில் 2ம் வகுப்பு படித்த மாணவரை மனித கழிவை அள்ள வைத்ததாக கடந்த 2015ம் ஆண்டு  வழக்குத் தொடரப்பட்டது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் காலனியை சேர்ந்த வீராசாமி மகன் சசிதரன். அப்போது அங்குள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.  சம்பவம் நடந்த அன்று மாலை, 3 மணிக்கு சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார்.

Latest Videos

அதை பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி  மாணவர் சசிதரனை மிரட்டி, அவன் கையால் அந்த மலத்தை அள்ள வைத்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு சென்ற மாணவர் சசிதரன், இது பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்து புகார் அளிக்கப்பட்டது.  அந்த வழக்கு பட்டியலினத்தவருக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

click me!