வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் திருட்டு; சாவகாசமாக மது அருந்திவிட்டு கைவரிசை

By Velmurugan s  |  First Published Feb 13, 2023, 12:47 PM IST

வேளாங்கண்ணி  அருகே குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் மதிப்பீலான ஒரு ஜோடி வைரதோடு திருட்டு. வீட்டு ஃபிரிட்ஜில் இருந்த ஊறுகாய் எடுத்து சென்று சாவகாசமாக மது அருந்தி விட்டு சென்ற கும்பல் குறித்து வேளாங்கண்ணி காவல் துறையினர் விசாரணை.


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சி ஊராட்சி ஆய்மழை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சந்திரகலா. இவர் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். விழா முடிந்தவுடன் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். 

வீட்டில் ஆள் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகைகள், ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள வைர கம்மல், ஆயிரத்து 500 ரூபாய்  ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இந்நிலையில் சந்திரகலா வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து  தகவல் கொடுத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

தகவல் அறிந்து சந்திரகலா வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பிரிட்ஜில் இருந்த  ஊறுகாய், மற்றும் டம்ளர், சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சாவகாசமாக அருகில் இருந்த வயல்வெளியில் மது அருந்திவிட்டு திருடிச் சென்றுள்ளனர். 

மீன் பிடிப்பதற்காக ஏரிக்கு சென்ற கூலி தொழிலாளி மற்றும் மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

மேலும் கைரேகை பதியாத அளவிற்கு தண்ணீரால் துடைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த மர்ம கும்பல் குறித்து சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஓட ஓட வெட்டி கொலை

click me!