நாகையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து; தாய் மகன் பலி

By Velmurugan s  |  First Published Feb 1, 2023, 3:00 PM IST

நாகை அருகே கீழ்வேளூரில் அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாயும், மகனும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டம், நாகூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. கீழ்வேளூர் அடுத்துள்ள அகரகடம்பனூர் பிரதான சாலை அருகில் பேருந்து  சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த  இருசக்கர வாகனமும் பேருந்தும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியைச் சேர்ந்த கனேஷ் (35)  அவரது தாய் சுந்தரம்பாள் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் போலீசார் உடலை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அரசுப் பேருந்து  ஓட்டுநர் பாண்டி(46) மற்றும் நடத்துனர் மகேந்திரன் (40) ஆகிய இருவரும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நிலையில் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

click me!