நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால் 8 மாத குழந்தை மூளை பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பால்ராஜ், கார்த்திகா தம்பதியர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், மரியா ஆரோனிகா என்ற 8 மாத குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில், குழந்தை ஆரோனிகாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவித்தனர்.
சென்னையில் தள்ளுவண்டியில் புரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
undefined
8 மாத குழந்தைக்கு சர்க்கரை நோய் என்ற செய்தியை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தனி குழு அமைத்து குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 250 என்ற நிலையில் இருந்துள்ளது.
திருப்பூரில் தமிழக இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது
இந்நிலையில், குழந்தைக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரையின் அளவு திடீரென 500ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த 8 மாத குழந்தை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. சர்க்கரையின் அளவு உயர்ந்ததைத் தொடர்ந்து குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.