பாத்திரக்கடையில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து; லிப்டில் சிக்கி ஊழியர் உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Apr 11, 2023, 3:51 PM IST

மயிலாடுதுறையில் லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடை ஊழியர் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டியுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் மேல தெருவைச் சேர்ந்தவர் சோழவேந்தன். இவருக்கு கமலா என்ற மனைவியும் லோகேஷ்(வயது 11) மோகித்(8) என இரண்டு மகன்கள் உள்ளனர். சோழவேந்தன் மயிலாடுதுறை மகாதான தெருவில்  மகாலட்சுமி என்ற  சில்வர் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் கடையில் விற்பனையாளர் மற்றும் அனைத்து பணிகளையும் செய்யும் ஊழியராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் பணியில் இருந்த சோழவேந்தன் முதல் தளத்தில் லிப்டில் பொருட்களை ஏற்றியபோது லிப்டை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் ரோப் அறுத்துகொண்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சோழவேந்தன் லிப்டின் இடையில் சிக்கிக் கொண்டார். இதனால் கீழே விழுந்த லிப்ட் அந்தரத்தில் தொங்கியது. இதனைப் பார்த்த கடை ஊழியர்கள் சோழவேந்தனை போராடி மீட்டனர். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சோழவேந்தனை அழைத்து சென்றுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

ஆளுநரை மிரட்டும் தொணியில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் - முதல்வருக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு பர்னிச்சர் கடையின் உரிமையாளர் ராஜ்குமார் ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே சோழவேந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து அறிந்த உறவினர்கள் விபத்து 3 மணிக்கு நடந்த நிலையில் இரவு 8 மணி வரை ஏன் தகவல் அளிக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சோழவேந்தன் இறப்பில் மர்மம் உள்ளதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை பார்க்க வேண்டும் என்று கூறி கடையின் முன்பு அவரது உறவினர்கள் திரண்டனர். இதனால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். 

திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

தொடர்ந்து உறவினர்கள் காவல் துறையினருடன் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். கிராமமக்கள் முன்னிலையில் கடைமேலாளர் பட்டிஸ்வரத்தைச் சோந்த பெருமாள் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 3 மணிக்கு நடைபெற்றதாக கூறப்படும் விபத்தை உடனடியாக தெரிவிக்காததால் சோழவேந்தனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும், முறையாக பாதுகாப்பு இல்லாத லிப்டில் அதிக அளவில் பொருட்களை வைத்து எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் சோழவேந்தன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுதர வேண்டும் என்று கூறியுள்ளனர். இச்சம்வம் தொடர்பா டிஎஸ்பி சஞ்சீவ்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

click me!