நாகப்பட்டினம் அருகே சாலையில் சென்ற தனியார் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை கிளம்பியது. பேருந்தில் 30 பயணிகளுக்கு மேல் இருந்தனர். நாகை மாவட்டம் பொறையாறு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
undefined
அப்போது அதே சாலையின் எதிரே கார் ஒன்று வந்துள்ளது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர், காரில் மோதிவிடாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பி இருக்கிறார். பேருந்து அதிவேகமாக வந்ததால் உடனே திருப்பியதில் சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் நடராஜன் பலத்த காயமடைந்தார். பயணிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
அந்த வழியாக சென்றவர்கள் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் பேருந்து ஓட்டுனரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்தால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தியிருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!