இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... தூக்கி வீசப்பட்ட இளம்பெண் துடிதுடித்து உயிரிழப்பு..!

Published : Nov 10, 2019, 05:19 PM IST
இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... தூக்கி வீசப்பட்ட இளம்பெண் துடிதுடித்து உயிரிழப்பு..!

சுருக்கம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் கண்ணகி (27). இவரும் இவரது தோழி பிரமிளா என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கடையூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கண்ணகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த பிரமிளா சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நாகை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் கண்ணகி (27). இவரும் இவரது தோழி பிரமிளா என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கடையூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கண்ணகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த பிரமிளா சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு