மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சீட்டு வாங்குவதற்கு கூட 20 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் கையெடுத்து கும்பிட்டு புகார் தெரிவித்த பொதுமக்கள் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதவல்லி ஐஏஎஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருந்து இருப்புகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
ஓரினசேர்க்கைக்காக வடமாநில இளைஞர் கடத்த முயற்சி; கத்தி, கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்
undefined
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு பிரிவிலும் பணத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பெயரை பதிவு செய்யும் சீட்டு கொடுக்கும் இடம், உள் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு, நோயாளியை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றம் செய்வதற்கு, நோயாளிளை பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதற்கு என ஒவ்வொரு பகுதியிலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் முறையிட்டனர்.
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி
மருத்துவமனையின் தரம் நன்றாக இருந்து பலன் இல்லை, நுழைவுச்சீட்டு முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே நாம் சிகிச்சை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று குமுறலை வெளிப்படுத்தினர். பொதுவெளியில் பொதுமக்கள் கூட்டாக ஒன்று திரண்டு இவ்வாறு புகார் தெரிவித்ததால் மருத்துவமனை அதிகாரிகள் கையை பிசைந்தபடி நின்றனர். கோட்டாட்சியரிடம் உரிய விசாரணை நடத்துமாறு சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.