ஹேர் கிளிப்பை விழுங்கிய குழந்தை; அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

By Velmurugan s  |  First Published Jul 3, 2023, 3:43 PM IST

3 வயது குழந்தை தவறுதலாக ஹேர் கிளிப்பை விழுங்கிய நிலையில் எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி மருத்துவர்கள் குழந்தையின் இறைப்பையில் இருந்து ஹேர் கிளிப்பை அகற்றி குழந்தையை காப்பாற்றி உள்ளனர்.


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் கீதா தம்பதியினர். தமிழரசன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா என்கிற 3 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தான் அணிந்திருந்த ஹேர் கிளிப் ஒன்றை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த ஹேர் கிளிப்பை குழந்தை விழுங்கியுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக வீட்டிற்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் எக்ஸ் ரே எடுக்குமாறு கூறியுள்ளார். எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது இரைப்பையில் ஹேர் கிளிப் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து திருவாரூர் ஜவுளிக் காரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அங்குள்ள மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். பெற்றோர்கள் அங்கு குழந்தையை அனுமதித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

அனைவரும் அண்ணன், தம்பியா பழகும் போது கடந்த கால கலவரங்களை திரைப்படமாக எடுப்பது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி

இதனையடுத்த தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுந்தர் என்பவர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் உதவியுடன் அறுவை சிகிச்சை இன்றி என்டோஸ் கோபி மூலம் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி குழந்தையின் இரைப்பையில் உள்ள ஹேர் கிளிப்பை பத்து நிமிடங்களில் அகற்றியுள்ளார்.

உறவினர்கள் உதவியுடன் கணவனை கொலை செய்த பெண்; உடலை மறைத்தபோது சிக்கிய மனைவி

click me!