நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 படகுகள் கடலில் கவிழ்ந்த விபத்தில் நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகு நடுக்கடலில் முழங்கியது. இதனால் படகில் மீன்பிடிக்கச் சென்ற கண்ணன், ஆறுமுகம், சந்தோஷ், மைக்கல் ஆகிய 4 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
undefined
அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மீன்பிடி கப்பலில் வந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டு கரையில் கொண்டு வந்து சேர்த்தனர். இதே போன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடலுக்குச் சென்ற 3 மீனவர்கள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்தனர்.
நான்காவது திருமணம் செய்ய தடையாக இருந்த மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகள்
பின்னர் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்தவர்களை கரையில் சேர்த்தனர். கரை திரும்பிய 7 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுமண தம்பதிக்கு 2.5 லட்சம் புல்லட் பைக்கை பரிசாக வழங்கி அழகு பார்த்த நண்பர்கள்