Watch : குப்பைக்கு வைக்கப்பட்ட தீ! ஃபேன்சி கடை குடோன் மொத்தமாக எரிந்து சேதம்!

By Dinesh TG  |  First Published Jun 7, 2023, 11:44 AM IST

மயிலாடுதுறை நகரின் பிரதான கடைவீதியில் பேன்சி கடையின் குடோன் மொத்தமாக எரிந்து சேதமானது. நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. உயிர்சேதம் இல்லை என்றாலும் அதிக பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


மயிலாடுதுறை நகரின் பிரதான கடைவீதியில் பேன்சி கடையின் குடோன் மொத்தமாக எரிந்து சேதமானது. நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. உயிர்சேதம் இல்லை என்றாலும் அதிக பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் வண்டிக்காரத்தெரு அமைந்துள்ளது. மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் இந்த சாலை, மினி மார்க்கெட் போல காணப்படும். சாலைகளை ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதி ஆகும். இந்த வண்டிக்கார தெருவின் பின்புறம் உள்ள தெரு குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்திலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கடைகளின் குப்பைகள், பழக்கடைகளின் அழுகல் பொருட்கள் ஆகியவை பின்புறம் உள்ள சந்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுவது வழக்கம். இது குறித்து இப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது

இந்நிலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்தில் சமூக விரோதிகள் தீ வைத்து எரித்ததால், வேகமாக பரவிய தீ அப்பகுதியில் உள்ள பேன்சி கடை ஒன்றின் குடோனில் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Tap to resize

Latest Videos

click me!