டேங்கர் லாரி -கார் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Oct 11, 2019, 10:45 AM IST

நாகை அருகே இன்று அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


நாகை அருகே இன்று அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (68). இவரது மனைவி சாந்தி (50). இவர்களது மகள் சுபத்ரா (38). இந்நிலையில், சுபத்ரா கணவர் சரவணன், நேற்று துபாய் நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டார். இதற்காக சோமசுந்தரம், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Tap to resize

Latest Videos

undefined

பின்னர் இரவு 10.30 மணியளவில் மருமகன் சரவணனை, வெளிநாட்டுக்கு வழியனுப்பி விட்டு காரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 2 மணியளவில் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் கோவில்பத்து அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி சோமசுந்தரம், சாந்தி, சுபத்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன், செந்தில்குமார், அவரது மகள் சாய்ஸ்ரீ, தாய் அன்னபூரணி ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

click me!