கும்பகோணம் அருகே பணி மாறுதல் உத்தரவை கண்ட அதிர்ச்சியில் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே பணி மாறுதல் உத்தரவை கண்ட அதிர்ச்சியில் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அடுத்த திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக லதா (49) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்றிருந்தபோது, கூட்டத்தில் திடீரென் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 20 பேருக்கு பணிநிரவல் திட்டத்தின் கீழ் பணி மாறுதல் உத்தரவை கல்வி அதிகாரிகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
undefined
அதில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வருகிற 12-ம் தேதி கண்டிப்பாக சென்று பணியில் சேர வேண்டும். தற்போது பணியாற்றும் பள்ளிகளில் இருந்து அவர்களை விடுவித்து தலைமைஆசிரியர் ஆணை வழங்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆசிரியை லதா பட்டுக்கோட்டை ஒன்றிய பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதனால் லதாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.