நாகை அரசு மருத்துவமனையை இடம் மாற்ற கடும் எதிர்ப்பு; நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

Published : May 17, 2023, 04:06 PM IST
நாகை அரசு மருத்துவமனையை இடம் மாற்ற கடும் எதிர்ப்பு; நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

சுருக்கம்

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முழுமையாக இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறித்து பொது மக்களுக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு.

நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனை தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று இடமாற்றம் செய்யப்பட உள்ளது. நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை முழுவதும் ஒரத்தூருக்கு இடம் மாற்றுவதை கண்டித்து பாஜகவினர் இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். நாகை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனை கட்டிடங்களை மருத்துவ கிடங்காக மாற்றக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

திருச்சி காந்தி மார்க்கெட் கடையில் பெண் விஏஓ தனது உறவினர்களுடன் தாக்குதல் 

இந்நிலையில் போராட்டத்தின் போது சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற பாஜகவினரை காவல் துறையினர் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தினர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையை கண்டித்து சாலையில் அமர்ந்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார்  மண்டபத்தில் அடைத்தனர்.

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு; மதுபாட்டிலால் கழுத்தில் குத்தி ஒருவர் கொலை

PREV
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு