மயிலாடுதுறை அருகில் வெடிகுண்டு வெடித்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்கள் குறித்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வு செய்து வெடிபொருட்களின் தன்மை குறித்து தடய அறிவியல் துறையினர் சோதனை செய்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவர் நேற்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை காவல்துறையினர் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிக்காத வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், வெடி மருந்துகள் ஆகியவை வீட்டின் உட்புறம் மற்றும் கொல்லைப்புறத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பெரம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காயத்ரி தலைமையில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் வெடி மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து அதனை மேல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மது வாங்குவதில் மோதல்; கூலி தொழிலாளியை கொன்று தோட்டத்தில் வீசி சென்ற திமுக பிரமுகருக்கு வலை
வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுடன் ஆட்களை கொள்ளும் வகையில் உள்ளே பால்ரஸ் குண்டுகள், இரும்பு ஆணிகள் ஆகியவை வைப்பதற்கான மூலப் பொருட்களும் இருந்தது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் ஏதேனும் குற்றச்சம்பவம் நிகழ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் விசாரணையில் குற்றவாளிடம் 4க்கும் மேற்பட்ட உரிமம் இல்லாத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.
Crime News: மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை
மேலும் ஆட்களை கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டு இருப்பதும் தயாரித்தவர் படுகாயம் அடைந்ததும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.