“ என்ன ரோடு இது? என் வண்டி வந்தாலே தாங்காது” அதிகாரிகளை கண்டித்த மதுரை ஆட்சியர்..

By Ramya s  |  First Published Jun 9, 2023, 9:52 PM IST

மதுரை மாவட்டத்தில் புதிய சாலையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், சாலை தரமற்று இருந்ததால் அதிகாரிகளை கண்டித்தார்.


1.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய சாலை தரமற்றதாக இருந்த நிலையில் சாலை அமைத்த அதிகாரியை மதுரை ஆட்சியர் சங்கீதா கண்டித்துள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முதல் குலசேகரன்கோட்டை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 1 கோடியே 10 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சூழலில் அப்போது அங்கு ஆய்வுப்பணிக்காக வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தனது காரை நிறுத்தி சாலையை ஆய்வு செய்து அதிகாரிகளை கண்டித்தார்.

Tap to resize

Latest Videos

இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக கூறிய அவர் இந்த சாலை அமைத்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் “ சாலை சரியில்லை, எனது வாகனம் வந்தாலே சாலை சேதமாகிவிடும். இது எப்படி நல்லா இருக்கும். dis qualified Road” என அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கண்டித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

click me!