மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டவரின் மகள் பாம்பு கடித்து பலி

Published : Jun 09, 2023, 05:38 PM IST
மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டவரின் மகள் பாம்பு கடித்து பலி

சுருக்கம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நாகலட்சுமியின் மகள் பாம்பு கடித்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி. கணேசன் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சங்கீதா, விஜய தர்ஷினி, தேன்மொழி, சண்முக பிரயா, ஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப வறுமையை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகலட்சுமிக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மையிட்டான்பட்டி பகுதியில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மையிட்டான்பட்டி ஊராட்சியின் வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சியின் செயலர் இருவரும் நாகலட்சுமியை பணி செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் அரசு நகரப் பேருந்துகளில் அறிமுகம்

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக நாகலட்சுமி பேருந்தில் சென்றார். அப்போது திடீரென சிவரக்கோட்டை அருகே பேருந்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கள்ளக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தைகளை கணேசன் தனது உறவினர்கள் மூலம் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், விஜயலட்சுமி, சண்முகபிரியா ஆகிய இருவரும் வீட்டின் பின்பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரையும் பாம்பு கடித்துள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுபு்பி வைத்தனர். குழந்தைகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சண்முக பிரியா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை - அதிகாரிகள் தகவல்

மற்றொரு குழந்தை விஜயலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து கள்ளிக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் உயிரிழந்த 2 மாதங்களில் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!