மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமண விழா ஒன்றில் இளைஞர்கள் சிலர் அத்துமீறி சாலையில் நின்று பட்டாசு வெடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே நகர் மன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள நகராட்சி நிர்வாகத்தினரும் பட்டாசு வெடிக்க தடை விதித்ததோடு, பட்டாசு வெடிப்பதை தடுக்க காவல்துறையும் இணைந்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
undefined
இந்நிலையில் பட்டாசு வெடிக்க தடை உத்தரவை மட்டும் விதித்த நிர்வாகத்தினர், அமல் படுத்தாத சூழலில் தடையை மீறி நகர் பகுதிக்குள் பட்டாசு வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இல்ல விழாக்களுக்கு, தலைவர்கள் வருகை என அனைத்து கட்சியினரும் இந்த தடையை மீறி பட்டாசு வெடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால் உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
கோதையாறு அணை பகுதியில் உல்லாசமாக உலா வரும் அரிகொம்பன்
இதே போன்று இன்று மதுரை சாலையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு பட்டாசு வெடித்தவாறு ஊர்வலமாக சென்ற பொதுமக்களில் சில இளைஞர்கள் வான வேடிக்கை பட்டாசை தலையில் தூக்கி வைத்து நடுரோட்டில் நடனமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசுடன் நடுரோட்டில் நடனமாடிய இளைஞர்களால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையில் நின்றிருந்த சூழலில் 108 ஆம்புலென்ஸ் வாகனமும் ஊர்ந்து கொண்டே கடந்து சென்றது வேதனையை அளித்துள்ளது.
நாமக்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை; கடிதத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை