மதுரையை கலக்கும் தர்பூசணி பரோட்டா; உணவு பாதுகாப்பு துறை சொன்ன விஷயம்!!

Published : Apr 12, 2025, 11:12 AM ISTUpdated : Apr 12, 2025, 11:18 AM IST
மதுரையை கலக்கும் தர்பூசணி பரோட்டா; உணவு பாதுகாப்பு துறை சொன்ன விஷயம்!!

சுருக்கம்

மதுரையில் மக்களைக் கவரும் வகையில் தற்போது புது வகையான பரோட்டா அறிமுகமாகியுள்ளது. அதுதான் தர்பூசணி பரோட்டா. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை என்ன சொல்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Watermelon Parotta is Trending in Madurai! Food Safety Department Warns! மதுரை என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பன் பரோட்டா தான். இது தவிர சிக்கன் சிலோன் பரோட்டா, தேங்காய் கோதுமை பரோட்டா, வெஜ் செட் பரோட்டா என பல வகையான வெரைட்டியில் பரோட்டாக்கள் விற்பனையாகின்றன. அந்த லிஸ்டில் தற்போது ஒரு புது வகையான பரோட்டாவையும் அறிமுகம் செய்துள்ளது. அதுதான் 'தர்பூசணி பரோட்டா'. 

என்ன தர்ப்பூசணியில் பரோட்டாவா என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? ஆமாங்க.. தற்போது கோடை காலம் என்பதால் மக்களை கவரும் வகையில் இந்த தர்ப்பூசணி பரோட்டாவை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் மதுரையில் ஹோட்டல்கள் உரிமையாளர்.

இதையும் படிங்க: உலகில் 6வது இடம் பிடித்த தமிழ்நாட்டு ஸ்பெஷல் பரோட்டா

மதுரையில் தர்பூசணி பரோட்டா வந்தது எப்படி?

முதன் முதலில் இந்த தர்பூசணி பரோட்டா மதுரையில் இருக்கும் விளக்குத்துண் பகுதியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது மாவட்டம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. 

இதையும் படிங்க:  சர்க்கரைவள்ளி கிழங்கு பரோட்டா...ஈஸியா செய்யலாம்

தர்பூசணி பரோட்டா செய்வது எப்படி?

தர்பூசணி பரோட்டா எப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் யோசிக்கலாம். அதாவது, எப்போதும் போல பரோட்டா மாவு தயார் செய்யும் போது அதனுடன் தர்பூசணி சாற்றையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இப்படி பரோட்டா மாவுடன் தர்பூசணி சாறு சேர்க்கும் போது அது ஒருவிதமான சுவையை கொடுக்கிறது. பிறகு மாவை எப்போதும் போல நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பின் பரோட்டாவாக தட்டி, நெய் தடவி தவாவில் போட்டு சுட்டு விற்பனை செய்கிறார்கள். சில ஹோட்டல்களில் தர்பூசணி வட்ட வடிவில் வெட்டி ஒரு துண்டை உள்ளே வைத்து பரோட்டாவாக சுட்டு விற்கிறார்கள். தர்பூசணியில் ஏற்கனவே இனிப்பு இருப்பதால் சிலர் வெறும் பரோட்டாவாக சாப்பிடுகிறார்கள் இன்னும் சிலரோ வழக்கம் போல சால்னா ஊற்றி சாப்பிடுகிறார்கள். தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது.

நிபுணர்கள் சொல்வது என்ன?

மதுரையில் டிரெண்டாகும் தர்பூசணி பரோட்டா குறித்த பல வீடியோக்கள் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த உணவு கலவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பொதுவாக பரோட்டா அவ்வளவு எளிதாக ஜீரணமாகாது. அதிக நேரம் எடுக்கும். அதேசமயம் தர்பூசணி மிக எளிதில் ஜீரணமாகிவிடும். இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் செரிமான அமைப்பில் பிரச்சனை வரலாம். கூடுதலாக குடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது. 

சிந்திக்க வேண்டியது!

பொதுவாக சமூக வலைத்தளங்களில் புது வகையான உணவுகள் ரெண்டாவது சகஜம் தான். ஆனால் சில சமயங்களில் தவறான உணவு சேர்க்கையால் அது மக்களின் உயிருக்கு உலை வைக்கும். எனவே, மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத உணவுகள் செய்வது உணவகங்களில் பொறுப்பு. அதேசமயம் ட்ரெண்டு தானே என்று அலட்சியமாக இருக்காமல், ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று  சாப்பிடுவதற்கு முன் ஒன்றுக்கு பல முறை யோசியுங்கள். எல்லாம் உங்க நல்லதுக்கு தான்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!