தமிழகத்தில் அனுமதியின்றி சிலைகள் வைக்க கூடாது... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய ஐகோர்ட் கிளை..!

By vinoth kumar  |  First Published Nov 17, 2022, 2:48 PM IST

விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.


தமிழக அரசின் அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது. மீறி சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக கூறியுள்ளது. 

விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சென்னை வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. அலட்சியமாக இருந்தால் கண் பார்வை பறிபோகும் அபாயம்.. எச்சரிக்கும் மருத்துவர்.!

சிலை வைக்கப்பட்ட பின் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் அனுமதி பெறும் வரை சிலையை தகரம் அமைத்து மூடிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அது முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே இது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்;- பட்டா இடத்திலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது தகரம் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல என வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

இதையும் படிங்க;- ஐயோ சாமி.. கல்யாணம் பண்ண ஏழு நாள்ல என்னை விட்டு போயிட்டியே.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..!

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்;- தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது. தமிழகத்தில் முறையான அனுமதியின்றி சிலைகளை வைக்க அதிகாரிகளும் அனுமதிக்க கூடாது. முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவே அறிவுறுத்தப்பட்டது. அனுமதி பெறும் வரை சிலையை திறப்பதோ, மரியாதை செய்வதோ கூடாது. பிரமாணப்பத்திரம் தாக்க செய்ய வேண்டும் மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- ஆவினை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க திட்டமா? குறைந்த விலையில் பால் விற்பனை செய்வது எப்படி.? பால்முகவர்

click me!