டெக் சிட்டியாக மாறப்போகும் தூங்காநகரம்.. மதுரையில் பிரம்மாண்ட ஐடி பார்க் வரப்போகுது.. விரைவில் குட்நியூஸ்..

By Ramya s  |  First Published Dec 1, 2023, 3:58 PM IST

மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்காக 12 இடங்களில் மண் எடுக்கப்பட்டு சோதனை பணிகள் நடந்து வருகிறது.


தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் ஐடி துறை சார்பில் பெரியளவில் முதலீடுகள் வரவில்லை. எனவே புதிய திட்டங்கள் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

தமிழகத்தில் ஐடி நிறுவனங்களின் தலைமையிடமாக சென்னை இருந்து வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக கோவையிலும் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே சென்னை, கோவை தவிர மற்ற முக்கிய நகரங்களிலும் ஐடி பார்க் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஐடி நிறுவனங்கள் இல்லாததால், அங்கு ஐடி படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னை அல்லது பெங்களூரு செல்ல வேண்டு உள்ளது.

Latest Videos

undefined

எனவே தென் மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு அருகிலே ஐடி நிறுவன வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதன்படி மதுரையில் 10.5 ஏக்கரில் எல்காட் உதவியுடன் மிகப்பெரிய டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இதன் மூலம் சுமார் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன்படி மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதன்படி மாட்டுத்தாவணியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் முதல்கட்டமாக 5.5 ஏக்கர் நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி நகரமைப்பு துறை அந்த நிலத்தை எல்காட் வசம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு தற்போது வரை நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இன்னும் இந்த திட்டத்திற்கு நிலமே ஒப்படைக்கப்படாததால் இந்த திட்டம் வருமா என்ற கேள்வியும் குழப்பமும் எழத்தொடங்கியது.

மதுரையில் அமைய உள்ள இந்த டைடல் பார்க்கில் மதுரை மாநகராட்சியின் பங்களிப்பு 51% எனவும் தனியார் துறையின் பங்களிப்பு 49% எனவும் மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்திருந்தார். இந்த பணிகளுகாக தமிழ்நாடு அரசு எல்காட் அதிகாரிகள் வழங்கிய ஆய்வறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு நிலத்தை பிரிப்பது போன்ற பணிகள் தொடங்கப்படும் என்றும் அதன்பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

டிகிரி போதும்..! தமிழக கூட்டுறவு சங்கங்களில் வேலை.. இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த நிலையில் தற்போது மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்காக 12 இடங்களில் மண் எடுக்கப்பட்டு சோதனை பணிகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து டெண்டர் விடும் பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கின் 2 மாதிரி புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. தலா 25 மாடிகள் கொண்ட வட்ட வடிவில் ஒரு கட்டிடமும், ட்வின் டவர் பாணியில் இன்னொரு கட்டிடத்தின் மாதிரிகளும் உருவாக்கபப்ட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒற்னு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

click me!