மதுரையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகள் விசாரணைக்காக வெளியி்ல் அழைத்து வரப்படும் போது அவர்களுக்கு காவல் அதிகாரிகள் செல்போன் கொடுத்து உதவும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் நீதிமன்ற வழக்கு வாய்தாவுக்காக காவல்துறையினர் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் கைதிகளை அழைத்து வரும் காவல்துறையினர் தாங்கள் அழைத்து வரும் கைதி வசதியாக படைத்தவராக இருந்தால் அவர்களிடம் கல்லா கட்டும் செயல் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. அந்த கைதிகளை அழைத்து வரும் காவலர்களுக்கு மட்டன் பிரியாணி, கை நிறைய ஊக்கத்தொகை என பிரமாண்ட கவனிப்பும் அந்த கைதிகள் மூலம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக ஓஎல்எக்ஸ் மொபைல் ஆப் மூலம் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே வீட்டை ஒத்திக்கு விடுவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த பலே கில்லாடி ஸ்ரீ புகழ் இந்திரா என்பவர் மதுரை மாவட்டம் மேலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்றுடன் 15 நாள் நீதிமன்ற காவல் முடிய உள்ள நிலையில் காவல் நீட்டிப்புக்காக வழக்கு விசாரணைக்கு சிறையில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு காவல்துறை மூலம் அழைத்துவரப்பட்டார்.
undefined
பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த திருவாரூர் தேர்; பொதுமக்கள் பரவசம்
இந்த கைதியை அழைத்து வரும் காவலர்களுக்கு, வரும் வழியிலேயே பலே கவனிப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக காத்திருந்த கைதிக்கு தங்கள் செல்போனை பேசுவதற்காக காவல்துறையினரே கொடுத்துள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தால் 2 லாரிகள் மோதி விபத்து; சிறுவன் பலி
ஸ்ரீ புகழ் இந்திரா என்ற இதே நபர் தான் பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கடந்த வருடம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.