சாதியை குறிப்பிட்டு மாணவிகளை தரக்குறைவாக பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது..!

Published : Apr 01, 2023, 03:05 PM IST
சாதியை குறிப்பிட்டு மாணவிகளை தரக்குறைவாக பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது..!

சுருக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம்  சாதி ரீதியாக ஒருமையில் பேசியுள்ளார். 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாக வராலாற்றுத்துறை பேராசிரியர் சண்முகராஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா. இவர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் எம்.ஏ முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம்  சாதி ரீதியாக ஒருமையில் பேசியுள்ளார். 

இதுதொடர்பாக  நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாணவி வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பேராசிரியர் சண்முகராஜா கைது செய்யப்பட்டார். 

ஏற்கனவே இந்த பேராசிரியர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சாதி ரீதியாக பேசியதால் பெற்றோர்கள் பேராசிரியர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!