பொதுமக்களின் வேண்டுகோளின் படியே ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் - அமைச்சர் தகவல்

By Velmurugan s  |  First Published Jan 9, 2024, 6:30 PM IST

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட முன்னாள் முதல்வரின் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளின்படியே ஜல்லிக்கட்டு அரங்கிற்கு பெயர் வைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு நவீன வசதிகளோடு தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான 100 சதவீத பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த மாதத்திற்குள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைப்பார். 

கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து

Tap to resize

Latest Videos

undefined

ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்த போது அதனை பல்வேறு வகையிலும் போராடி இன்றைக்கு போட்டி நடைபெற காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளோடும், கட்டுப்பாடுகளோடும் மதுரையில் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் பாரம்பரியம் மாறாமல் நடைபெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கருணாநிதியின் பெயர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதியோடு சூட்டப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் மாற்று கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். ஆகையால் கருணாநிதியின் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்தால் அது ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகத்தான் பார்க்க வேண்டும். 

போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவிட்டனர் - அமைச்சர் ரகுபதி

தற்போது அரை வட்ட வடிவாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழக அரசின் நிதி நிலையை பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் முழு வட்ட வடிவில் அரங்கம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். இப்பகுதியில் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு தற்போது பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதனை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கின்றனர் என்றார்.

இந்த ஆய்வின்போது தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பொதுபணித்துறை  செயலாளர்,  சுற்றுலா மற்றும் அறநிலையங்கள்துறை செயலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

click me!