மதுரையில் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 23 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தனியார் வங்கியில் 20 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக இன்று காலை தனது வீட்டு மொட்டை மாடியில் துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது தவறுதலாக கை பட்டதில் திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறியது. வெளியே வந்த துப்பாக்கி குண்டு ராஜேந்திரனின் வயிற்று பகுதியில் துளையிட்டு உள்ளே சென்றது.
undefined
கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்சேவை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்த பிரதமர்
துப்பாக்கி சத்தம் கேட்டு உடனடியாக மேலே சென்ற அவரது குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு ஆட்டாவில் ஏற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த கரிமேடு காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தவறுதலாக துப்பாக்கி வெடித்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சம்பவம் அடைந்த கரிமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து கரிமேடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் இதனால் அப்ப பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.