வந்தே பாரத் ரயில் சேவையால் தென் மாவட்டங்களில் பல முக்கிய ரயிகளின் நேரம் மாற்றம்

By Velmurugan s  |  First Published Sep 30, 2023, 4:01 PM IST

நெல்லை, சென்னை இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் வைகை விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.


திருநெல்வேலி - சென்னை இடையே அண்மையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு வழங்கப்பட்ட வாரத்தின் 6 நாட்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் நெல்லையில் இருந்து வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு புறப்படும் நிலையில், மதுரையில் இருந்த காலை 7 மணிக்கு வைகை விரைவு ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், வைகை ரயிலை காட்டிலும், வந்தே பாரத் ரயில் அதிவேகமாக இயக்கப்படுவதால் சென்னையை சென்றடைவதில் நேர குளறுபாடு ஏற்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

சேலையில் தொட்டில் கட்டி விளையாடியபோது சோகம்; கழுத்து இறுகி சிறுவன் பரிதாபமாக பலி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் வைகை ரயிலில் பயணிக்கும் பயணிகள் உரிய நேரத்தில் சென்னையை சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் வைகை ரயில் மதுரையில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி காலை 7.10க்கு புறப்பட வேண்டிய வைகை விரைவு ரயில் அக்டோபர் 1ம் தேதி முதல் 6.40 மணிக்கு புறப்பட்டு 2.10 மணிக்கு சென்னை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாளுக்காக கோவிலுக்கு வந்த எச்.ராஜாவை சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பிய பாஜக தொண்டர்கள்

வந்தே பாரத் ரயிலுக்காக வைகை ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், வந்தே பாரத் ரயில் வேகமாக செல்கிறது என்பதை காட்டுவதற்காக நெல்லை, வைகை, பாண்டியன் உள்ளிட்ட ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போன்று சென்னை - மதுரை இடையேயான வைகை விரைவு ரயில் வழக்கம் போல பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு சென்றடையும்.

செங்கோட்டை - சென்னை இடையேயான பொதிகை விரைவு ரயில் மதுரையில் இருந்து இரசு 9.55 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் சென்னை - செங்கோட்டை இடையேயான பொதுிகை விரைவு ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக 4.30 மணிக்கு புறப்படும்.

மதுரை - சென்னை இடையேயான பாண்டியன் விரைவு ரயில் மதுரையில் இருந்து 9.35 மணிகடகு பதிலாக 9.20 மணிக்கு புறப்படும். 

மதுரை - கோவை இடையேயான கோவை விரைவு ரயில் மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக 7 மணிக்கு புறப்படும். அதே போன்று மதுரை - விழுப்புரம் இடையேயான விழுப்புரம் விரைவு ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு பதிலாக 3.35 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

click me!