மதுரையில் தனியார் மதுபான பாரில் ஒலித்த தேசிய கீதத்திற்கு மது பிரியர்கள் அனைவரும் கூட்டாக எழுந்து நின்று மரியாதை செலுத்திய வீடியா தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இந்திய - அமெரிக்க அணிகளுக்கு இடையேயான லீக் சுற்று போட்டி அமெரிக்காவில் உள்ள நியுயார்க் விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு; மூதாட்டி பலி
undefined
இந்த கிரிக்கெட் போட்டி மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் பார் ஒன்றில் தொலைக்காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது போட்டி தொடக்கத்தின்போது இருநாட்டு வீரர்களும் அணிவகுத்து நிற்க இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
Theft: ரூ.10 ஆயிரம் கடனுக்காக ஆட்டோவை திருடிச் சென்ற பாஜக பிரமுகர் - கன்னியாகுமரியில் பரபரப்பு
அப்போது இந்திய நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பாரில் மது அருந்துவதற்காக இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்த குடிமகன்கள் உடனடியாக எழுந்து நின்று தேசிய கீதம் பாடியதோடு தேசிய கீதம் முடியும் வரை நின்றபடி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து இருக்கைகளில் அமர்ந்தபடி மது அருந்திகொண்டே கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தனர்.
இதனிடையே மதுபான பாரில் தேசிய கீதத்திற்கு குடிமகன்கள் மரியாதை செலுத்திய விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.