மதுரை மாவட்டத்தில் கதவுகள் சேதமடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட அரசு பேருந்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மண்டல போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை, உடைசலாக பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் போக்குவரத்து டெப்போவில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் TN58 - N1542 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தானது பின்புற கதவுகள் சேதமடைந்து பின்புற வாசலில் சாய்த்துவைக்கப்பட்ட நிலையில் இயக்கப்படுகிறது.
அழகிகளின் புகைப்படங்களை வைத்து தொழில் அதிபர்களுக்கு வலை; டேட்டிங் ஆப்பால் வந்த பகீர் சம்பவம்
undefined
இதனால் பின்புற படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை பேருந்து இயக்கப்பட்டபோது பின் வாசல் வழியாக ஏறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்தபோது திடீரென வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எதிர்பாராத விதமாக அவசர காலகட்டத்தில் இது போன்ற படிக்கட்டுகளில் ஏற முற்பட்டால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலையில் பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஆபத்தை சற்றும் உணராத போக்குவரத்து துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பேருந்தினை இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்த நிலையிலும் மதுரை மண்டலத்தில் தொடர்ச்சியாக ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை, உடைசலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.