இந்த மாதிரி உதவி செஞ்சி பாருங்க நிம்மதியா தூக்கம் வரும் - மாற்று திறனாளிகளை நெகிழ வைத்த மதுரை முத்து

By Velmurugan s  |  First Published Jun 12, 2024, 11:12 PM IST

மதுரையில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது நண்பர்களோடு இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி பொருட்களை வழங்கினார்.


மதுரை மாவட்டத்தை சேர்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் மதுரையைச் சேர்ந்த  நகைச்சுவை நடிகரான மதுரை முத்து தனது நண்பர்களுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி காந்தி அருங்காட்சியக கூடத்தில் நடைபெற்றது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, உடை, சமையல் பொருட்கள் மற்றும் தலைக்கவசம் ஆகிய நலத்திட்ட உதவிகளை மதுரை முத்து மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து வழங்கினர்.

கள்ளக்காதலனை பெண்களுடன் நெருக்கமாக பழகவிட்டு பணம் பறித்த இளம்பெண்; ஜிம்முக்குள் ஹைடெக் மோசடி

Tap to resize

Latest Videos

undefined

அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடிகர் மதுரை முத்து நகைச்சுவைகளை எடுத்துக்கூறி பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.  இதனைத் தொடர்ந்து மேடையில் சினிமா பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ச்சியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்வித்தனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் மதுரை முத்து, மாற்றுத்திறனாளிகளிலேயே தவழும் மாற்றுத்திறனாளிகள் கடுமையான சிரமத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உதவிடும் வகையில் நண்பர்களுடன் இணைந்து உதவி செய்கிறேன். இனியும் தொடர்ந்து பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவ உள்ளோம். நடிகர் ராகவாலாரன்ஸ் மற்றும் பாலா ஆகியோர் எடுத்து வரும் உதவிக்கான முன்னெடுப்பு அனைவரையும் உதவ தூண்டுகிறது. 

ஜூன் 15ல் முப்பெரும் விழா; கோவை குலுங்கிட வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

இது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கு, இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியும், நடிகர் ராகவா லாரன்ஸ்சை ரோல்மாடலாக வைத்து முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் இனி அனைவருக்கும் உதவி செய்ய வருவார்கள் என நம்புகிறோம் என்றார்.

click me!