Tamil Nadu BJP: பாஜகவில் இருப்பவர்கள் குற்ற பின்னணி உள்ளவர்களா? தமிழிசைக்கு திருச்சி சூர்யா நேரடி சவால்

Published : Jun 11, 2024, 01:32 PM IST
Tamil Nadu BJP: பாஜகவில் இருப்பவர்கள் குற்ற பின்னணி உள்ளவர்களா? தமிழிசைக்கு திருச்சி சூர்யா நேரடி சவால்

சுருக்கம்

பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவை விட்டு விலகுகிறேன் என திருச்சி சூர்யா நேரடி சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சூர்யா கூறுகையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்று இருக்கிறார். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற திராவிட கட்சிகளின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பணமில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்கிற முடிவை எங்கள் மாநில தலைவர் எடுத்தார். அதற்கான ஆதரவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் சென்று அவர்களை சந்தித்து வருகிறோம். 

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை என மக்கள் வருத்தப்படுகின்றனர். ஆனால் மக்கள் முதலில் பாஜக.வை ஆதரிக்க வேண்டும். இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், மூன்று பேர் மத்திய அமைச்சராக உள்ளனர். மூன்று பேர் ஆளுநர்களாக உள்ளனர். மக்கள் பாஜக பிரதிநிதியை நேரடியாக தேர்ந்தெடுத்து அனுப்பினால் நிச்சயம் மாநில தலைவர் பிரதமரிடம் கேட்டு அமைச்சரவையில் இடம் பெற்று தருவார்.

5 தலைமுறையாக எங்கள் வாழ்விடம்; 15 நாட்கள் தான் கெடு - கண்ணீரோடு முறையிடும் மாஞ்சோலை மக்கள் 

எங்கள் எண்ணம் வருகின்ற 2026ல் மாநிலத்தை ஆள வேண்டும் என்பது மட்டுமே. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதரவுடன் தான் பயணிக்க முடியும் என்பதை நாங்கள் முதன்முதலாக உடைத்து இருக்கிறோம். பெரிய சாம்ராஜ்யமான அதிமுக பல இடங்களில் தடம் தெரியாமல் போய்விட்டது. சில இடங்களில் இன்று டெபாசிட் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாஜகவால் தோல்விகள் அதிகமாகிறது. சிறுபான்மையினர் வாக்கு குறைகிறது என்று சொன்ன அதிமுக, இப்போது கூட்டணி பிரிந்த பிறகு கீழே சென்றுள்ளார்கள் என்று பார்த்தால் அதிமுகவை விட தமிழகத்தில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. 2024 அதிமுகவை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம், 2026 திமுகவை பின்னுக்கு தள்ளி ஆட்சிக்கு வருவோம்.

திமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால் தான் எட்டு சதவீத வாக்கு வங்கியை இழந்திருக்கிறார்கள். அதிமுகவை சார்ந்த ஆதரவுகள் சீமானுக்கு கூட சென்றுள்ளது. திமுகவிற்கு எதிரான கட்சி அதிமுகவா, பாஜகவா என்கிற குழப்பம் இருந்த நிலையில் இந்த தேர்தல் முடிவின் மூலம் பாஜக தான் 2026இல் திமுகவை எதிர்க்க சரியான கட்சி என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். 

Breaking: புதுவையில் கழிவறை வழியாக பரவிய விஷ வாயு; ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் பலி - இருவர் கவலைக்கிடம்

நான் திமுகவில் இருந்த போது எனது மகன் பிறந்த நாளுக்கு தமிழிசை அக்கா வந்துள்ளார்கள். தனிப்பட்ட முறையில் என்மீது பாசமானவர். ஆனால் கட்சி ரீதியாக பார்த்தால் அவர் தலைவராக இருக்கும்போது நான் பாஜகவிற்கு வரவில்லை. அவரைப் பரட்டை என்று கூறிய போது அவருக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதை திமுகவினர் திட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை அப்படி இருந்தாலும் அது முன்னாள் இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால் சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் அப்படி பதிவிட்டேன். 

2027 வரை அண்ணாமலை தான் மாநிலத் தலைவராக தொடர்வார். 2026 இல் முதல்வராவார். மதுரையை பொருத்தவரையில் நல்ல வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் தான் இந்த வாக்குகள் கிடைத்தது, வரக்கூடிய நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் இது வேலைகள் நடைபெறும் என கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!