உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற வேன் மீது தனியார் பேருந்து வேகமாக மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் தனியார் வேன் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து வேன் மீது அசுர வேகத்தில் மோதி தள்ளியது. இந்த விபத்தில், வேனில் பயணித்த பிரவியம்பட்டியைச் சேர்ந்த மலையாண்டி, பாபு, செல்லம், பாண்டியம்மாள், கணேசன், பாண்டி, சுந்தரபாண்டி மற்றும் பேருந்தில் பயணித்து வந்த மீனாகுமாரி உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
undefined
இவர்கள் அனைவருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாந்தூர் காவல் நிலைய காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் 4 மாத கர்ப்பிணிக்கு உடலின் பல பகுதிகளில் கத்திகுத்து; போதையில் கணவன் வெறியாட்டம்
வேனில் வந்தவர்கள் பிரவியம்பட்டியைச் சேர்ந்த சிவராமன், சுதாகர் என்ற சகோதரர்களின் உறவினர் மறைவிற்காக உரப்பனூர் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த வேன், செல்லம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற போது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.