திருமண விழாவில் டிரம்ஸ் வாசித்து மனமகளை இம்ப்ரஸ் செய்த மனமகன்; மதுரையில் சுவாரசியம்

By Velmurugan s  |  First Published Jun 12, 2024, 11:29 PM IST

மதுரையில் திருமண விழாவில் மனமகன், மனக்கோலத்தில் டிரம்ஸ் வாசித்து மனமகளை இம்ப்ரஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மதுரை கிரைம்பிரான்ஞ்ச் பகுதியை சேர்ந்த பட்டதாரிகளான மகேஷ்குமார் மற்றும் யுவராணி ஜோடிக்கு  இன்று மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு மணமகன், மணமகளுக்கு திருமாங்கல்யம் அணிவித்த  பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது திருமண விழாவில் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

இந்த மாதிரி உதவி செஞ்சி பாருங்க நிம்மதியா தூக்கம் வரும் - மாற்று திறனாளிகளை நெகிழ வைத்த மதுரை முத்து

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் மனக்கோலத்தில் இருந்த மணமகன் திடீரென மாலையுடன் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து இசை கச்சேரி நடைபெற்ற பகுதிக்கு சென்று டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார். இதனை பார்த்து வியப்படைந்த மணப்பெண் அதே மணக்கோலத்தில் இசைக்கச்சேரி மேடைக்கு சென்று ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்த மணமகன் அருகே நின்றபடி வாழத்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தார்.

ஜூன் 15ல் முப்பெரும் விழா; கோவை குலுங்கிட வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் மனக்கோலத்தில் டிரம்ஸ் இசைத்த சுவாரசிய சம்பவத்தினை திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் பார்த்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!