தமிழர்கள் மீது பாஜக தான் உண்மையான அன்பு கொண்டுள்ளது; தமிழிசை விளக்கம்

Published : Feb 23, 2023, 09:55 AM ISTUpdated : Feb 23, 2023, 10:10 AM IST
தமிழர்கள் மீது பாஜக தான் உண்மையான அன்பு கொண்டுள்ளது; தமிழிசை விளக்கம்

சுருக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கவில்லை, தமிழர்கள் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பதால் தான் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெலங்கானா, புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார்கள். தரிசனத்திற்கு பின்னர் வெளியே வந்த தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், “மீனாட்சியை வணங்குவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. சமீபத்தில் குடியரசு தலைவர் இங்கு வழிபாடு செய்திருந்தார். நாட்டின் முதல் குடிமகனாக ஒரு பெண் இருக்கும் பெருமையை பிரதமர் ஏற்படுத்தி தந்துள்ளார்.

ஆளுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறையாக ராஜ்பவன் உள்ளது. தமிழக மக்கள் மீது எங்களுக்கு அன்பு இல்லை என்று எம்பி வெங்கடேசன் தெரிவிக்கிறார். தமிழக மக்கள் மீது உண்மையில் அதிக அன்பு கொண்டுள்ளோம். அப்படி அன்பு செலுத்திய காரணத்தால் தான் இந்தியாவில் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எம்பி வெங்கடேசன் எங்களைப் பற்றி தவறாக திரித்து எழுதி கொண்டிருக்கிறார். ஆளுநர்களுக்கு யார் அங்கீகாரம் கொடுத்தாலும் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்பது போல பேசும் எம்பி வெங்கடேசனுக்கு தான் உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறையில்லை.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..! பாராட்டு தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலக தரத்தில் கட்டப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே, 50 மாணவர்கள் படிக்கும் நிலையில் கூடுதலாக மாணவர்கள் படிக்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தமிழகத்திற்கு எய்ம்ஸ் வர வேண்டும் என இப்போதுள்ள ஆட்சியாளர்கள் தான் நினைத்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் நினைக்கவில்லை. ஹைதராபாத்தில் கூட எய்ம்ஸ் கட்டி முடிக்கும் வரை மாணவர்கள் தற்காலிகமாக வேறு கல்லூரியில் தான் படித்தார்கள். 

இந்த பார்முலா எலக்‌ஷன் கமிஷன் அனுமதித்தால் இனி தமிழகத்தில் எந்த தேர்தலும் நியாயமாக நடக்காது!அலறும் கிருஷ்ணசாமி

சென்னை, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. ஆயுஷ்மான் திட்டம் போன்று யாரும் சிந்திக்காத திட்டங்களை எல்லாம் பிரதமர் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என சொல்லும் கருத்து தவறானது" என தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்