‘மக்கள் நலனுக்காக வேண்டினேன்.!’ மதுரை மீனாட்சி தரிசனம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பு

By Raghupati R  |  First Published Feb 18, 2023, 10:04 PM IST

நாட்டு மக்கள் நலனுக்காக வேண்டினேன் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகைப் பதிவேட்டில் குறிப்பு எழுதியுள்ளார்.


இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்துள்ளார். தமிழ்நாடு முதல்வரின் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,  டிஜிபி சைலேந்திரபாபு போன்றோர் வரவேற்றனர்.

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் முர்முவை தமிழ்நாடு முதல்வரின் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி சைலேந்திரபாபு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உள்ளிட்டோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர். நாட்டு மக்கள் நலனுக்காக வேண்டினேன் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகைப் பதிவேட்டில் குறிப்பு எழுதியுள்ளார்.

இதையும் படிங்க..மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!

இதையும் படிங்க..வாக்காளர்களுக்கு திமுகவினர் பத்துப்பாத்திரம் மட்டும்தான் தேய்க்கவில்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய் !

click me!