மதுரையில் டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடி தலைமறைவான ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை கோமதிபுரம் அருகே ஆவின் நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார். இவர் மதுரை நேதாஜி சாலை பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம் டெல்லியைச் சேர்ந்த ஜிஜேந்தர் குமார்(22) கடந்த 5 மாதங்களாக உதவியாளராகவும், ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சஞ்சீவ்குமாருக்கு நெருக்கமான ஜிதேந்தர் அவரின் வங்கி பண பரிவர்த்தனை, தொழில் விஷயகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி சஞ்சீவ்குமார் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்துடன் இருப்பதை பார்த்த ஜிஜேந்தர் குமார் பணத்தை திருட திட்டமிட்டுள்ளார்.
undefined
வழக்கமாக டிராவல்ஸ் உரிமையாளருக்கு மாலையில் டீ வாங்கி தருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று சஞ்சீவ்குமாருக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், அந்த டீயில் அவருக்கு தெரியாமல் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த சஞ்சீவ்குமார் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.
புகையிலை பொருட்கள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
இதனைத் தொடர்ந்து அவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த ரூ.5 லட்சத்து 30ஆயிரத்தை திருடிவிட்டு தலைமறைவானார். சஞ்சீவ்குமார் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்து போது பணம் மாயனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் தீடீர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள ஜிதேந்தரை தேடி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அலுவலக பணியாளரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி கைது