என்னடா இது தமிழ்நாடு போலீசுக்கு வந்த சோதனை; மதுரையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை திருட்டு

By Velmurugan s  |  First Published May 11, 2024, 12:59 PM IST

மதுரை அலங்காநல்லூர் அருகே பெண் காவல் ஆய்வாளரின் வீட்டின் கதவை உடைத்து 250 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மதுரை மாவட்டம்  அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (வயது 42). காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஷர்மிளா தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்டிவிஷன் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். 

Palani Murugan Temple: தமிழ் கடவுள் முருகனுக்காக ஒன்று சேரும் 3 மாநில முதல்வர்கள்; பழனியில் அமைச்சர் அதிரடி ஆய்வு

Latest Videos

undefined

இந்நிலையில், நேற்று இரவு ஷர்மிளா தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மன்னவன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்.

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து; வேண்டுமென்றே பெண்களை சாலையில் ஓடவிட்ட ஓட்டுநர்?

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், சுமார் 250 சவரனுக்கு மேல் நகை மற்றும் 5 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எஸ்.பி முருகானந்தம், டி.எஸ்.பி கிருஷ்ணன் மற்றும் போலீசார்  நேரில் சென்று ஆய்வு செய்தனர். காவல் ஆய்வாளரின் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!