பேருந்து நிலையத்தில் இளம் ஜோடி அலப்பறை; மாணவர்கள் முகம் சுளிப்பு

Published : Aug 02, 2023, 11:03 AM IST
பேருந்து நிலையத்தில் இளம் ஜோடி அலப்பறை; மாணவர்கள் முகம் சுளிப்பு

சுருக்கம்

ரீல் வீடியோவுக்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை தூக்கிக்கொண்டு பேருந்து நிலையத்தில் வலம் வருவதை பார்த்த மாணவர்கள், பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

ரீல் என்ற பெயரில் பலரும் பலவிதமான விநோத செயல்களில் ஈடுபட்டு அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பொதுமக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயல்கின்றனர். இந்த ரீல்களில் பல வீடியோ காட்சிகள் காண்பதற்கு இனிமையாகவும், பொழுது போகும் வகையிலும் இருக்கும். 

சில காட்சிகள் நம்மை முகம் சுளிக்க வைக்கும். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்தினுள் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் காட்சியை ஒரு ஜோடி ரீல் சூட் என்ற பெயரில் அலப்பறை செய்தது. இளம்பெண்ணை இளைஞன் தூக்கி செல்லும்  காட்சியை ரீலுக்காக அவர்கள் வீடியோ பதிவு  செய்துள்ளனர். 

தூங்கிக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; வயல்வெளியில் தூக்கி வீசப்பட்ட இருவர் - ஒருவர் பலி

இந்த நிலையில், பேருந்துக்காக காத்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள் போன்ற டீன் ஏஜ் நபர்களும், முதியவர்களும் இவர்களது அலப்பறையை கண்டு முகம் சுளிப்பதை காண முடிந்தது. பொது இடத்தில் ஏனைய நபர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் செயல்பட வேண்டும் என்ற சமூக பொறுப்புணர்வு இன்றி, பொது இடத்தில்  என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோநிலை மேலோங்கியிருப்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆக்சிஜன் மாஸ்க்காக பயன்படுத்தப்படும் டீ கப்புகள்; அரசு மருத்துவமனையின் அவலத்தை கண்டு நடுங்கும் நோயாளிகள்

PREV
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?