யாரும் இல்லாத வீட்டில் புகுந்து அசந்து தூங்கிய இளைஞர்! போராடி வெளியேற்றிய போலீஸ்!

By SG Balan  |  First Published Aug 1, 2023, 12:16 AM IST

அறைக்குள் சென்ற போலீசாருக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. வீட்டுக்குள் புகுந்த இளைஞர் படுக்கை அறையில் மெத்தையில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் யாரும் இல்லாத வீட்டிற்குள் புகுந்து அசந்து தூங்கிய இளைஞர், வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர மறுத்து அலப்பறை செய்திருக்கிறார். அவரை வெளியேற்ற முயன்றி போலீசாருக்கும் அவருக்கும் குடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளை பகுதியை சேர்ந்த எஞ்சினியர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். அதனால், பள்ளிவிளையில் உள்ள அவரது பிரமாண்டமான வீடு பூட்டப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும்போது அந்த வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Latest Videos

இந்நிலையில் ஞாயிறு இரவில் வீட்டின் மாடிக்கதவு திறந்து கிடந்த நிலையில், மின் விளக்குகளும் எரிந்துகொண்டிருந்தன. அக்கம் பக்கத்தினர் இதை கவனித்து வீட்டு உரிமையாளரின் உறவினருக்குத் தெரியப்படுத்தினர். அவர் திருடர்கள் யாரும் புகுந்துவிட்டனரா என்று அஞ்சி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

போலி காசோலைகளைக் கொடுத்து வங்கியில் ரூ.5 கோடியை அபேஸ் செய்த இன்ஜினியர்!

வடசேரி போலீசார் உடனடியாக அந்த வீட்டுக்கு வரைந்தனர். அதற்குள் வீட்டிற்குள் ஒருவர் இருப்பது தெரிந்துள்ளது. மாடி வழியாக வீட்டிற்குள் சென்ற போலீசார், விளக்கு எரிந்துகொண்டிருந்த படுக்கை அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. படுக்கை அறையில் இருந்த மெத்தையில் ஒரு இளைஞர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

காவல்துறையினர் அந்த இளைஞரை தூக்கத்தில் இருந்து உசுப்பி என்ன ஏது, ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறீர்கள் என்று விசாரித்துள்ளனர். ஆனால் அவர் ஆங்கிலத்தில் போலீசாரைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்டதுடன் இது என் வீடு என்றும் கூறியிருக்கிறார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்த போலீசார் அவரது சகோதர் போன் நம்பரைப் பெற்று விசாரித்துள்ளனர்.

சகோதரரிடம் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் நாகர்கோவிலில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிந்தது. அடிக்கடி ஏதாவது வீட்டு மாடிக்குச்  சென்று வெளியே வைத்திருக்கும் பொருட்களை திருடிச் சென்று விற்று மதுபோதை ஏற்றிக்கொள்வார் என்பதும் தெரியவந்தது.

இவருதான் அந்த சீட்டிங் சாம்பியன்... சம்பளக் கணக்கில் மனைவி பெயரைச் சேர்த்து ரூ.4 கோடி சுருட்டிய ஊழியர்!

click me!