மது போதையில் பெண் ரகளை: நாகர்கோவிலில் பரபரப்பு!

Published : Jul 30, 2023, 12:32 PM ISTUpdated : Jul 30, 2023, 12:33 PM IST
மது போதையில் பெண் ரகளை: நாகர்கோவிலில் பரபரப்பு!

சுருக்கம்

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்துதான் செல்ல வேண்டும். இதனால் இங்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருகிறார்கள்.

அந்த வகையில், இன்றி காலையிலும் வடசேரி பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தின் பிளாட்பாரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் டிப்டாப் உடையில் சுற்றி திரிந்தார். பின்னர் அவர் பிளாட்பாரத்தில் தனது பேக்கை வைத்துவிட்டு படுத்து தூங்கினார். அப்போது அங்கிருந்த வாலிபர்கள் சிலர் பெண்ணிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தனர். அவரிடம் பேசியபோது அவர் திருவனந்தபுரம் செல்ல வேண்டும் என்று கூறினார். உடனே அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை பேருந்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அவர் திடீரென தனது மேலாடையை  கழற்றி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த பகுதியிலேயே அந்த பெண் சுற்றி திரிந்தார். இதனால், அவரிடம் பயணிகள் விசாரித்தனர். அப்போது தானும் எனது கணவரும்  நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிரேம்ஸ் (frames) என்ற ஹோட்டலில் வேலை பார்ப்பதாகவும் வேலை பார்த்த சம்பள பணம் தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

எங்கள பார்த்துத்தான் காப்பி அடிக்கிறாங்க... பாஜகவுக்கு இங்க வாய்ப்பில்ல ராஜா - விஜய் வசந்த் எம்.பி.,!

உடனடியாக அப்பெண்ணின் போனில் இருந்த  ஹோட்டல் உரிமையாளரை தொடர்ப்பு கொண்ட பொதுமக்கள், அங்கு பணியில் உள்ள அவரது கணவரையும் ஹோட்டல் உரிமையாளரையும் வரவழைத்தனர். ஆனால் உரிமையாளர் வராமல் பணியாளரை மட்டும் பேருந்து நிலையத்திற்க்கு அனுப்பி வைத்தார். பணியாளரையும் தனது கணவரையும் பார்த்தவுடன் அப்பெண் ஆவேசபட்டு தனது சம்பளத்தை தருமாறு கூறி அடிக்க பாய்ந்தார். மேலும் ஆபாச வார்த்தைகாளால் வருத்தெடுத்தார்.

இதனால் பேருந்துநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அங்கிருந்த சக பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வெகுநேரமாகியும் போலீசார் வரவில்லை. எனவே, உடனடியாக பயணிகள் அப்பெண்ணை சாமாதானம்  செய்து அவரது கணவருடன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

வேலை பார்த்த ஹோட்டலில் சம்பளம் தராததால் மது போதையில் கையில் காசு இல்லாமால் பேருந்து நிலையத்தில்  அலைந்து திரிந்து பயணிகளை ஆபாசமாக பேசியும் முகம் சுழிக்க வைக்கும் செயலில் ஈடுபடட்ட அப்பெண்ணால் பேருந்துநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?