கன்னியாகுமரியில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு

By Velmurugan s  |  First Published Jul 24, 2023, 7:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா கும்பல்களை ஒழிக்க மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் கஞ்சா கும்பல்களால் அவ்வப்போது பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு கன்னியாகுமரி சுனாமி காலனியில் இரண்டு கஞ்சா கும்பல்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

இதில் சுனாமி காலயையைச் சேர்ந்த ஆக்னல் என்ற வாலிபரை எதிர் தரப்பை சார்ந்த ஜெப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் அரிவாளால் வெட்டினர். இதை அடுத்து அங்கிருந்து இரு சக்கர வாகனம் மூலம் தப்பி ஓடிய அந்த போதை கும்பல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு வங்கி முன்பு வந்து நின்றுள்ளனர். 

Latest Videos

undefined

புதுச்சேரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபை நோக்கி பேரணி; தடுப்புகள் மீது ஏறி போராட்டம்

அப்போது வங்கியில் ஏடிஎம் மிஷின் மூலம் திருச்சியில் இருக்கும் தனது தாய்க்கு பணம் அனுப்ப வந்த கன்னியாகுமரி ஹைகிறவுன்ட் பகுதியை சேர்ந்த மீனவர் மோகன் தாஸ் என்பவரிடம் கஞ்சா போதையில் தகராறு செய்த அக்கும்பல் அவரையும் அறிவாளால் தலையில் வெட்டி உள்ளனர். 

இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரும்  கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் படுகாயம் அடைந்த இருவர்களிடமும்  விசாரணை மேற்கொண்டார். இதை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறையினர் தேடுதல் வேட்டையை  தொடங்கினர். அப்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆக்னல் மற்றும் மோகன் தாஸ் இருவரையும் மீண்டும் தாக்க வந்த ஜெப்ரினை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். 

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்; மேடையில் இருந்து கீழே விழுந்த திமுக அமைப்பாளர் படுகாயம்

அப்போது காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓட முயன்று கீழே விழுந்து சிறிய அளவிலான  காயமடைந்த அவனை காவல் துறையினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முழு கஞ்சா போதையில் இருந்த அவன் காவல் துறையினரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். தனக்கு வழக்கறிஞர் இருப்பதாகவும் காவல் துறையினரை சும்மா விட மாட்டேன் எனவும், நீயா நானா என பார்த்து விடுவதாகவும் சவால் விட்டு அலப்பறையில் ஈடுபட்டான். 

சிகிச்சை முடிந்து அவனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்புடைய இருவரை  தேடி வருகின்றனர். தொடர்ந்து கஞ்சா போதை கும்பலின் அட்டூழியத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!