நாகர்கோவிலில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் கனல் கண்ணன், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பெரியார் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரேயுள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த கனல் கண்ணன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.
இவர் கடந்த 18 ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மத போதகர் உடை அணிந்து பெண்ணுடன் நடனம் ஆடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவின் பின்னணியில் தமிழ் பாடம் இசைக்கிறது.
வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்??? மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்!!!! மனம் திரும்புங்கள்!!!'' என பதிவிட்டு இருந்தார். இது விவாதத்தை கிளப்பியது. கனல் கண்னன் கிறிஸ்தவ மதத்தை அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !
இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவிலில் உள்ள சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 2 பிரிவுகளின் கீழ் கனல் கண்னன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 இலட்சம் மதிப்பிலான காரை வாங்கிய பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா.. யார் வாங்கி கொடுத்தா தெரியுமா?