கன்னியாகுமரியில் சோதனைச்சாவடி அருகே வீசி செல்லப்பட்ட ஆண் குழந்தையால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jun 19, 2023, 10:53 AM IST

கன்னியாகுமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழியில் சோதனை சாவடி அருகில் பணியில் இருக்கும் காவல் துறையினர் கண்முன்னே சாஸ்தாகோவில் வாசலில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வீசி விட்டு சென்ற கொடுர தாயை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில்  ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள சாஸ்தாகோவில் வாசல் முன்பு பிறந்து ஒருசில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடந்தது. கோவில் வாசலில் கிடந்த குழந்தை அழுவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். 

உடனடியாக இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்கள். அங்கு செவிலியர்களால் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. 

Latest Videos

திருவண்ணாமலையில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆரல்வாய்மொழியில் சோதனை சாவடி அருகில் பணியில் இருக்கும் போலீசார் கண்முன்னே சாஸ்தாகோவில் வாசலில் பிறந்து ஒருசில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வீசி சென்றது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து பிறந்த குழந்தையை கோவில் வாசலில்  கொடூர மனதுடன் வீசி விட்டு சென்றவர்கள் குறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் வேலூரில் பரபரப்பு

click me!