கன்னியாகுமரி மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த 3 குழந்தைகளின் தந்தையை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரும் மாயமானது தெரிய வந்தது. மேலும் சிறுமி மாயமான அதே நாளில் தான் செல்வகுமாரையும் காணவில்லை என்று அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் காவல் துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது.
MDMK Vaiko Condemns: “நீங்கள் முதல்வரல்ல ஆளுநரே” மத்திய அரசின் பணியாளர் மட்டும் தான் - வைகோ ஆவேசம்
செல்வகுமாருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் குறித்து காவல் துறையினர் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், அவரது செல்போன் சிக்னல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருப்பதாக காண்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நாகப்பட்டினம் விரைந்த காவல் துறையினர் அங்கு தனி அறையில் சிறுமியை அடைத்து வைத்து செல்வகுமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
பாஜகவுக்கு எதிராக ஆவேசமாக களம் இறங்கும் திமுக; கோவையில் கண்டன பொதுக்கூட்டம்
இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட காவல் துறையினர் செல்வகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.